Cockroach Janta Party : டெல்லியில் ‘காக்ரோச் (கரப்பான்பூச்சி) ஜனதா பார்ட்டி’ (சி.ஜே.பி) இன்று ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கவுள்ளது.
Cockroach Janta Party : டெல்லியில் ‘காக்ரோச் (கரப்பான்பூச்சி) ஜனதா பார்ட்டி’ (சி.ஜே.பி) இன்று ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கவுள்ளது.

Published on: June 6, 2026 at 11:03 am
புதுடெல்லி, ஜூன் 6, 2026: டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (சி.ஜே.பி) இன்று (சனிக்கிழமை) ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கிவுள்ளது. நீட் இளங்கலை 2026 வினாத்தாள் கசிவு மற்றும் சி.பி.எஸ்.இ-யின் ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) முறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி இப்போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கிடையில், போராட்டத்திற்கான அனுமதி கோரிக்கை எதுவும் வரவில்லை என்று டெல்லி காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.
‘ஜென்-இசட்’ தலைமுறையினரால் வழிநடத்தப்படும் சி.ஜே.பி-யின் நிறுவனர் அபிஜீத் டிப்கே, இந்தியா வந்து போராட்டத்தை வழிநடத்தவுள்ளார். இந்த நிலையில், “சட்ட வரம்புகளுக்குள் தேவையான நடைமுறைகளை பின்பற்றுவோம்” என்று சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர்கள் அசுதோஷ் ரங்கா மற்றும் வருண் தாஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்தனர்.
சோனம் வாங்சுக் பங்கேற்பு
இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இணையவுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் லடாக்கில் தன்னாட்சி அதிகாரம் கோரி நடைபெற்ற போராட்டங்களின் போது அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். “ஜூன் 6-ஆம் தேதி நிலைமையில் மாற்றம் இல்லையெனில், டெல்லியில் சி.ஜே.பி உறுப்பினர்களுடன் இணைவேன்” என்று அவர் முன்னதாக அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க : மேகதாது அணை விவகாரம்.. 40 ஆண்டுகளாக அரசியல் செய்யும் தமிழ்நாடு.. டி.கே சிவக்குமார் விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com