குஜராத்தில் அமைக்க வேண்டியது தானே? வைகோ பரபரப்பு அறிக்கை!

Vaiko : ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை மீண்டும் வேறு வடிவத்தில் தூத்துக்குடியில் நிர்மாணிக்க வேதாந்தா குழுமம் முயற்சி என வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: June 4, 2026 at 11:41 am

சென்னை, ஜூன் 4, 2026: ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை மீண்டும் வேறு வடிவத்தில் தூத்துக்குடியில் நிர்மாணிக்க வேதாந்தா குழுமம் முயற்சி என வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவில் தாமிரம் கிடைப்பது இல்லை என்று அண்மையில் பிரதமர் நநேரந்திர மோடி அங்கலாய்த்துக் கொண்டார். அப்படி தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டுமானால் அவரது குஜராத் மாநிலத்திலேயே அமைக்கலாமே?

பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமைக்கலாமே? தமிழ்நாட்டை நாசமாக்கும் விதத்தில் நம் மாநிலத்தில் வேதாந்தா குழுமம் தாமிர உற்பத்தி ஆலையைத் தொடங்கி திட்டமிட்டு, தமிழக அரசை அணுகி அனுமதி பெற முயற்சிப்பதாக கிடைத்த செய்தி உண்மையாக இருக்குமானால் அதைவிட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருக்க முடியாது.

முதலமைச்சர், வேதாந்தா குழுமம் ஆலை அமைக்க எவ்விதத்திலும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று தமிழக மக்கள் நலனைக் காக்கவும், குறிப்பாக தூத்துக்குடி மண்டல மக்கள் நலனைக் காக்கவும் ஆன கடமை உணர்ச்சியோடு இந்த வேண்டுகோளை வைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்க.. அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com