தீ பற்றி எரிந்த ஹோட்டல்.. மகனை மார்போடு அணைத்தபடி குதித்த பெண்!

Delhi Hotel Fire: டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி, 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published on: June 3, 2026 at 8:41 pm

Updated on: June 3, 2026 at 10:20 pm

டெல்லி, ஜூன் 3, 2026: தென் டெல்லி ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில், 15 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலர் காயமடைந்த நிலையில், சிலர் கட்டிடத்தின் மேல் மாடிகளில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர். அதில் பெண் ஒருவர் தனது மகனை மார்போடு அணைத்தப்படி குதித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

எனினும், இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; விசாரணை நடைபெற்று வருகிறது.

தப்பிக்க முயற்சி

தீ விபத்து காரணமாக, புகை மற்றும் தீ காரணமாக உள்ளே செல்லும் வழிகள் அடைந்ததால், பலர் ஜன்னல்கள் உடைத்து வெளியேறினர். குறைந்தது ஆறு பேர் கட்டிடத்தில் இருந்து குதித்தனர்; அதில் ஒரு பெண் தனது குழந்தையுடன் குதித்தார். இந்நிலையில், மோஹம்மது சஹிதுல் இஸ்லாம், ஆர்மின் ஜமான், ரியானா ஆகியோர் குதித்தவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அருகிலுள்ள மெத்தைகள் மற்றும் போர்வைகள் கொண்டு வந்து சாலையில் விரித்து, குதித்தவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர். சிலர் மனித சங்கிலி அமைத்து உள்ளே சிக்கியவர்களை வழிநடத்தினர். மேலும், பெரும்பாலான மக்கள் வீடியோ எடுப்பதை நிறுத்தி, மீட்பு பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், டெல்லி தீயணைப்பு படை, போலீஸ், பேரிடர் மீட்பு குழுக்கள் இணைந்து செயல்பட்டன. மீட்புப் பணியில், குறைந்தது 10 போலீசார் காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com