Rajya Sabha Bypoll: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
Rajya Sabha Bypoll: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

Published on: June 2, 2026 at 5:26 pm
Updated on: June 2, 2026 at 6:17 pm
சென்னை, ஜுன் 2 2026: தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் பி. தேன்மொழி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி. சண்முகம், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மே 7-ஆம் தேதி ராஜினாமா செய்ததால், இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல்
வேட்புமனுக்களை சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. தேன்மொழி அல்லது இணை செயலாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பேர்லின் ரூப்குமார் ஆகியோரிடம் சமர்ப்பிக்கலாம். ஜூன் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தவிர, ஜூன் 8ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்.
தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் ஜூன் 9-ஆம் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 11-ஆம் தேதி பிற்பகல் 3 மணி ஆகும். வேட்புமனு திரும்பப் பெறும் காலக்கெடு முடிந்த பின்னரும் போட்டி நிலவினால்,ஜூன் 18ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சட்டமன்றச் செயலாளரகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: 1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com