பிரபல பின்னணி பாடகி சுமன் கல்யாண்பூர் காலமானார்..பிரதமர் மோடி இரங்கல்

Suman Kalyanpur Passes Away: பத்ம பூஷண் விருதுபெற்ற பாடகி சுமன் கல்யாண்பூர் வயது மூப்பு காரணமான உயிரிழந்தார்.

Published on: June 1, 2026 at 8:51 pm

மும்பை, ஜுன் 1 2026: பிரபல பின்னணி பாடகியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான சுமன் கல்யாண்பூர் தன்னுடைய 89 வயதில் உயிரிழந்தார். வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு இந்திய இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த சுமன் கல்யாண்பூர்?

1950-களில் தனது இசைப் பயணத்தை தொடங்கிய சுமன் கல்யாண்பூர், இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் ஏராளமான மறக்க முடியாத பாடல்களை பாடியவர். மென்மையான குரலும் உணர்ச்சிப்பூர்வமான பாடல்களும் அவரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றவர். பல பாடல்களில் அவரது குரல் லதா மங்கேஷ்கரின் குரலுடன் ஒப்பிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பத்ம பூஷண் விருது

ஆறு தசாப்தங்களுக்கு மேலான இசைப் பயணத்தில் பல மொழிகளில் பாடல்கள் பாடிய சுமன் கல்யாண்பூர், இந்திய திரைப்பட இசை வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றர். அவரது இசைச் சேவையை பாராட்டி இந்திய அரசு 2023-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தது. சுமன் கல்யாண்பூரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் இசை ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இரங்கல்

சுமன் கல்யாண்பூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது, பிரபல பாடகி சுமன் கல்யாண்பூர் ஜியின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது இனிமையான குரலும், உள்ளத்தைத் தொடும் பாடல்களும் நமது கலாச்சார உலகை வளப்படுத்தின. தனது பாடல்கள் மூலம், இசை ஆர்வலர்கள் மற்றும் இந்தியத் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இனிமையான குரலும் காலத்தால் அழியாத பாடல்களும் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும் என இசை உலகினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com