Blast box office success : ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Blast box office success : ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Published on: May 31, 2026 at 8:38 pm
சென்னை, மே 31 2026: அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளாஸ்ட். இந்த படத்தில் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த மே 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்ட ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அர்ஜுனின் சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் பாராட்டுகளை பெற்றுள்ளன.
இந்நிலையில், ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் உலகளவில் ரூ.13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள், அர்ஜுன் மீண்டும் தனது பழைய பாணியில் திரும்பியுள்ளார் என்று பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் வசூல் மற்றும் வரவேற்பு காரணமாக, ‘பிளாஸ்ட்’ திரைப்படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஜனநாயகன் எப்போது வரும்? வெளிப்படையாக பேசிய டைரக்டர் ஹெச். வினோத்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com