Governors House Navratri celebration | ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு அமைக்கப்பட உள்ளது. இந்த வழிபாட்டில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்.
Governors House Navratri celebration | ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு அமைக்கப்பட உள்ளது. இந்த வழிபாட்டில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்.
Published on: September 19, 2024 at 11:11 pm
Governors House Navratri celebration | கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அடையாள சான்று ஏதேனும் அவசியம். அதன்படி பொதுமக்கள் தங்களின் பெயர், வயது, பாலினம், முகவரி, கைபேசி எண், வருகைக்கான தேதி, புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று போன்ற விவரங்கள் அவசியம்.
ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு வரும் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 12 வரை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள #நவராத்திரி கொலு 2024 நிகழ்வைக் கொண்டாட மக்களை அன்புடன் அழைக்கிறது. இந்த பண்டிகை நிகழ்வில் உங்கள் பங்கேற்பை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். (செய்தி வெளியீடு… pic.twitter.com/T45gU18piZ
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 19, 2024
இந்த விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் மாதம் 30 ஆகும். தொடர்ந்து இவர்களுக்கு அழைப்பு அனுமதி வழங்கப்படும். இவர்கள் அக்டோபர் மூன்றாம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை மாலை 4 முதல் 6:00 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தகவலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
அதில், “’முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தினை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகை இரண்டாம் (2) நுழைவாயில் வழியாக வந்தடைய வேண்டும். மேலும், ஆர்வமுள்ள வெளிநாட்டினரும் ‘நவராத்திரி கொலு 2024’கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்; அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com