Narendra Modi in Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் பயங்கரவாத அனுதாபி கட்சிகளை நிராகரித்துள்ளனர் என ஸ்ரீநகரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.
Narendra Modi in Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் பயங்கரவாத அனுதாபி கட்சிகளை நிராகரித்துள்ளனர் என ஸ்ரீநகரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.
Published on: September 19, 2024 at 3:33 pm
Narendra Modi in Jammu and Kashmir | “ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் மீண்டும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளளனர். தங்கள் வாக்குகளால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று உணர்ந்துள்ளனர். இது அவர்களின் அதிகாரம் பெறுவதற்கான முதல் படியாகும்” என ஜம்மு காஷ்மீரில் இன்று (செப்.19, 2024) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஷேர்-இ-காஷ்மீர் ஸ்டேடியத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய மோடி, “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுக்கும் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “எனது ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் இனி ஆதரவற்றவர்கள் அல்ல. மோடி ஆட்சியில் அவர் அதிகாரம் பெற்று வருகிறார். ஜம்மு காஷ்மீர் பாஜகவும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு பா.ஜ.க உத்தரவாதம் அளிக்கும்” என்றார்.
Jammu and Kashmir is currently celebrating the festival of democracy.
— BJP (@BJP4India) September 19, 2024
Yesterday, the first round of voting took place in 7 districts.
Kishtwar saw over 80% turnout, Doda recorded above 71%, Ramban surpassed 70%, and Kulgam saw over 62% turnout.
Many constituencies broke… pic.twitter.com/q18HhLAJyl
மேலும், “முன்பு தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலைமைகளை நினைவில் கொள்ளுங்கள். மாலை 6 மணியுடன் பிரச்சாரங்கள் நிறுத்தப்படும். வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது சாத்தியமில்லை. இதனால் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி மகிழ்ச்சியடைந்தன. இந்த மூன்று குடும்பங்களும் உங்களின் உரிமைகளை பறித்தன. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தன” என்றார்.
தொடர்ந்து, “இன்று நள்ளிரவில் பிரச்சாரம் நடக்கிறது. தற்போது மக்கள் ஜனநாயகத்தை கொண்டாடி வருகின்றனர். இளைஞர்கள் மீண்டும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் வாக்கு, ஜனநாயக உரிமை, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று உணர்கிறார்கள். இந்த நம்பிக்கைதான் அதிகாரமளிப்பதற்கான முதல் படியாகும். மேலும், கல் வீச்சு மற்றும் பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டும் கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க : 18,626 பக்க அறிக்கை; ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com