SSLC Exam Result: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அமைச்சர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSLC Exam Result: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அமைச்சர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: May 18, 2026 at 5:56 pm
சென்னை, மே 18 2026: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர். இந்த தேர்வு கடந்த மார்ச் 11-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதிப்பெண்னை அறிந்துகொள்ள மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். அதற்காக அரசு தேர்வுத்துறை சார்பில் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் வெளியாகும் மதிப்பெண் பட்டியலில் மாணவர்களின் பெயர், பதிவு எண், பள்ளியின் பெயர், பாட வாரியான மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி நிலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். பின்னர் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு முடிவுகளில் திருப்தியில்லாத மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க நீட் மறுதேர்வு.. மாணவ- மாணவியருக்கு இப்படி ஓர் வாய்ப்பா? செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com