நாவூரும், ருசி அள்ளும்: 1 கிலோ மீனில் சுவையான குழம்பு செய்வது எப்படி?

Food | 1 கிலோ மீனில் சுவையான குழம்பு வைப்பது எப்படி என்பது தெரியுமா?

Published on: September 19, 2024 at 10:42 am

Updated on: September 19, 2024 at 10:43 am

Food | என்னதான் விதவிதமாக சமைத்தாலும் மீன் குழம்புக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மற்ற அசைவ உணவை விட இவர்கள் மீன் குழம்பை வெகுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். இந்த மீன் குழம்பை சுவையாக செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீன் – 1 கிலோ
பெரிய வெங்காயம் -2
பூண்டு – 10 பல்லு
நல்லெண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
சோம்பு -சிறிதளவு
கருவேப்பிலை -ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
தக்காளி – 3
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு

செய்முறை

முதலில் மீனை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது மிளகாய் தூள் சேர்த்து ஊற வைக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, வெந்தயம் மற்றும் சோம்பு சேர்த்து வறுக்க வேண்டும்.

தாளிப்பு பொரிந்ததும் இதனுடன் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் அரைத்து வைத்த விழுதினை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்ப்பதால் வதங்குவதை விரைவுப்படுத்தும். வெங்காயம், பூண்டின் பச்சை வாடை நீங்கும் வரை நன்கு வதக்க வேண்டும். அடுப்பு தீயை லோ ஃப்ளேமில் வைத்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை நன்கு வதங்கியதும் இதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பு தீயை லோ ஃப்ளேமில் வைத்து மசாலாவின் பச்சை வாடை நீங்கும் வரை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். இவை தொக்கு பதத்திற்கு வந்தவுடன் இதனுடன் சிறிது புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வேக வைத்து பின் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடத்திற்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் உப்பு சரிபார்த்துக் கொண்டு, கழுவி வைத்த மீன் துண்டுகளை இதனுடன் சேர்க்க வேண்டும். மீன் துண்டுகளை கிளறி விடாமல் குழம்புக்குள் மூழ்கும் படி மெதுவாக சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

மீன் எளிதில் வேகக்கூடியது எனவே ஐந்து நிமிடத்தில் எண்ணெய் பிரிந்து குழம்பு தயாராகி விடும். இப்பொழுது சுவையான மீன் குழம்பு தயார். இது சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க : வீட்ல கத்தரிக்காய் இருக்கா? இந்த டிஸ் ட்ரை பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com