NEET aspirant in Rajasthan : நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ராஜஸ்தானில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
NEET aspirant in Rajasthan : நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ராஜஸ்தானில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Published on: May 16, 2026 at 2:38 pm
ஜெய்ப்பூர், மே 16, 2026: ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, 23 வயது மருத்துவ மாணவர் பிரதீப் மஹிச் தற்கொலை செய்து கொண்டார். அவர் 650 மதிப்பெண்கள் பெறுவார் என குடும்பம் எதிர்பார்த்த நிலையில், தேர்வு ரத்து செய்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் சிகார், ஜல்தாரி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பிரதீப், தற்கொலை செய்துகொண்டுள்ளார்; இந்தச் சம்பவம் நடந்தபோது, அவரது இளைய சகோதரி கோச்சிங் வகுப்பில் இருந்தார்; மூத்த சகோதரி குளியலறையில் இருந்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்; பிரதீப், ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர்; கடந்த மூன்று ஆண்டுகளாக சிகாரில் நீட் தேர்வு படிப்பில் ஈடுபட்டிருந்தார்.
இவரது குடும்பம், அவர் 650 மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவார் என நம்பிக்கை கொண்டிருந்தது. முன்னதாக, இளங்கலை நீட் 2026 தேர்வு மே 3 அன்று நடைபெற்றது; ஆனால் கேள்வித்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் காரணமாக தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. இதனால், சுமார் 22 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜூன் 21 நீட் மறுதேர்வு.. மாணவச் செல்வங்களே நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com