MP Bhojshala controversy: மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் மே 15, 2026 அன்று, தர மாவட்டத்தில் உள்ள விவாதத்திற்குரிய ‘போஜ்ஷாலா – கமால் மௌலா’ வளாகம் ஒரு கோவில் என அறிவித்துள்ளது.
MP Bhojshala controversy: மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் மே 15, 2026 அன்று, தர மாவட்டத்தில் உள்ள விவாதத்திற்குரிய ‘போஜ்ஷாலா – கமால் மௌலா’ வளாகம் ஒரு கோவில் என அறிவித்துள்ளது.

Published on: May 15, 2026 at 4:48 pm
இந்தூர், மே 15, 2026: மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் மே 15, 2026 அன்று, தர மாவட்டத்தில் உள்ள விவாதத்திற்குரிய ‘போஜ்ஷாலா – கமால் மௌலா’ வளாகம் ஒரு கோவில் என அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு இந்து தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. தீர்ப்புக்குப் பிறகு தர மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
போஜ்ஷாலா வளாகம் கோவில் என நீதிமன்றம் அறிவித்தது. இங்கு, 2024 இல் நடத்திய அறிவியல் ஆய்வு மற்றும் பழமையான கல்வி, இலக்கிய, சிற்பக் குறிப்புகள் அடிப்படையில், இந்த வளாகம் பரமாரர் காலத்தில் (ராஜா போஜ்) உருவான வாக்தேவி (சரஸ்வதி) கோவில் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இது சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் என இந்து தரப்பினர் தங்களது வாதத்தை முன்வைத்தனர்; இது கமால் மௌலா மசூதி என இஸ்லாமியர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தீர்ப்புக்குப் பிறகு தர மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் படை நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மக்கள் அமைதியை பேணுமாறு கேட்டுக்கொண்டார்; தவறான தகவல் பரப்புவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அபத்தமான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மேற்கு வங்க பா.ஜ.க முதல் சபாநாயகர்.. யார் இந்த ரதீந்திர போஸ்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com