அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

CM Vijay : அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Published on: May 14, 2026 at 5:34 pm

Updated on: May 14, 2026 at 5:35 pm

சென்னை, மே 14 2026: தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போது 58 சதவீதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி, 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும், அவற்றை வடிவமைத்து முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றி வருவதாகவும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு 2026 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, மாநில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதே பலனை பெறும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதனால் ஆண்டுக்கு அரசுக்கு கூடுதலாக ரூ.1,230 கோடி செலவினம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்றும் முதலமைச்சர் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க விரைவில் மகளிர் உரிமைத் தொகை.. முதலமைச்சர் விஜய்!

விஜய்க்கு நாலாபுறமும் பெருகும் ஆதரவு.. மன்னார்குடி எம்.எல்.ஏ முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வரை.. பரபரக்கும் தமிழக அரசியல்! AMMK Removes MLA Backing TVK

விஜய்க்கு நாலாபுறமும் பெருகும் ஆதரவு.. மன்னார்குடி எம்.எல்.ஏ முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வரை..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com