ஒரே நாடு ஒரே தேர்தல் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Published on: September 18, 2024 at 11:07 pm
Union Cabinet | உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி பேசிய நிலையில், மத்திய அமைச்சரவை புதன்கிழமை (செப்.17, 2024) இது தொடர்பான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே அட்டவணையில் ஒத்திசைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் முன்மொழிவு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒரு நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு தனது அறிக்கையில், ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’, அடிக்கடி தேர்தல்கள் நிச்சயமற்ற சூழலை உருவாக்கி, கொள்கை முடிவுகளை பாதிக்கும் என்று கூறியுள்ளது.
18,626 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, செப்டம்பர் 2, 2023 அன்று குழு அமைக்கப்பட்டதிலிருந்து, 191 நாட்களுக்கும் மேலாக ஆராய்ச்சிப் பணிகளுடன் விரிவான ஆலோசனைகளின் விளைவாகும்.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கிய வாக்குறுதியாக இருந்து வருகிறது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் 100 நாட்களைக் குறிக்கும் நிகழ்வில் செவ்வாய்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த மசோதாவை அரசாங்கம் இந்த காலக்கட்டத்தில் செயல்படுத்தும் என்று வலியுறுத்தினார்.
கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையின் போது, அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து பறிப்பு, யூனியன் பிரதேசமாக மாற்றம்: ராகுல் ட்வீட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com