Odisha: சகோதரியின் எலும்பு கூடுடன் சென்ற நபருக்கு வங்கி பணத்தை ஒப்படைத்தது.
Odisha: சகோதரியின் எலும்பு கூடுடன் சென்ற நபருக்கு வங்கி பணத்தை ஒப்படைத்தது.

Published on: April 30, 2026 at 6:06 pm
புவனேஸ்வர், ஏப்.30, 2026: ஒடிசா மாநிலம் கோஞ்சார் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்: தனது சகோதரி இறந்துவிட்டார் என்பதை நிரூபிக்க, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜீது முண்டா, அவரது சகோதரியின் எலும்புக் கூடுடன் வங்கிக்கு வந்தார். பின்னர் போலீசார் மற்றும் நிர்வாகம் தலையிட்டு, அவருக்கு பணம் வழங்கப்பட்டது
இந்தச் சம்பவம் கோஞ்சார் மாவட்டம், பட்னா பிளாக், மாலிபோசி கிளையில் உள்ள ஒடிசா கிராமிய வங்கியில் நடைபெற்றது. இதில் ஈடுபட்டவர் டியானாலி கிராமத்தைச் சேர்ந்த ஜீது முண்டா (50) என்பவர் ஆவார் இவரது, சகோதரி கல்ரா முண்டா (56), 2026 ஜனவரி 26 அன்று இறந்தார். இந்நிலையில், ஜீது பலமுறை வங்கிக்கு சென்று பணம் பெற முயன்றார்
அப்போது, வங்கி அதிகாரிகள், “கணக்கு வைத்திருப்பவரை கொண்டு வாருங்கள்” என்று கூறியதாக அவர் தெரிவித்தார். “அவர் இறந்துவிட்டார்” என்று கூறியும், அதிகாரிகள் நம்பவில் அதனால், கல்லறையைத் தோண்டி எலும்புக் கூடுடன் வங்கிக்கு வந்தார். இந்நிலையில், வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பட்னா போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து, எலும்புக் கூடினை மீண்டும் அடக்கம் செய்தனர்
இதற்கிடையில், போலீசார், ஜீது முண்டா சட்ட நடைமுறைகள் நாமினி மற்றும் சட்டப்பூர்வ வாரிசு பற்றி அறியாதவர் என்பதால் தவறான புரிதல் ஏற்பட்டதாக விளக்கினர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ₹19,402 வங்கி கணக்கிலிருந்து வழங்கியது. கூடுதலாக, ₹30,000 ரெட் கிராஸ் நிதியிலிருந்து வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க : ஓசூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. பால் வியாபாரி கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com