HC Closes Parthiban’s Certificate Case : ஜாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்கி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
HC Closes Parthiban’s Certificate Case : ஜாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்கி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Published on: April 29, 2026 at 1:57 pm
சென்னை, ஏப். 29 2026: நடிகர் பார்த்திபன் தனக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், நடிகர் பார்த்திபனுக்கு இன்று சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கும் அதிகாரம் இல்லை. ஏற்கனவே இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படிடையிலேயே இந்த சான்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விளம்பரத்திற்கு வேண்டுமானால் இந்த சான்று பயன்படும். சாதி, மதமற்றவர் என சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இலை. சாதி மதமற்றவர் என்பதை நாம்தான் பின்பற்ற வேண்டுமே தவிர அதற்கு சான்றிதழ் அவசியமில்லை. நமது நடத்தையின் மூலம் தான் அதை காட்ட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க : மேரேஜ் பண்ணிக்கலாமா? ரூ.9 கோடி மோசடி.. பிரபல நடிகை மீது வழக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com