Asian Beach Games : ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி வென்றது.
Asian Beach Games : ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி வென்றது.

Published on: April 28, 2026 at 2:59 pm
சான்யா, ஏப்.28, 2026: சீனாவின் சான்யாவில் நடைபெற்று வரும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா கபடி போட்டிகளை நிறைவு செய்தது. இதில், பெண்கள் அணி தங்கப் பதக்கத்தை வென்றது; ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தில் முடித்தது. பெண்கள் அணி, இறுதிப் போட்டியில் இலங்கையை 47-31 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது. இது, இவ்வாண்டு ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கம் ஆகும்.
ஈரானிடம் தோல்வி
ஆண்கள் அணியை பொறுத்தமட்டில், இறுதிப் போட்டியில் ஈரானிடம் 31-44 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தில் முடித்தது. ஆசிய கடற்கரை விளையாட்டுகள், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) ஏற்பாடு செய்த பன்முக விளையாட்டு விழா ஆகும். கடற்கரை மற்றும் கடலோர விளையாட்டுகளை மையமாகக் கொண்ட இப்போட்டியின் 2026 பதிப்பு முழுவதும் சான்யா நகரில் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளுக்கு இந்தியா, 31 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது. 2016 பதிப்பில், இந்தியா மொத்தம் 24 பதக்கங்கள் (2 தங்கம், 4 வெள்ளி, 18 வெண்கலம்) வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கொல்கத்தா வீரர் ரகுவன்ஷிக்கு டீமெரிட் பாயிண்ட்.. அது என்ன? அபராதம் எவ்வளவு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com