IPL 2026 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரகுவன்ஷிக்கு போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
IPL 2026 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரகுவன்ஷிக்கு போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Published on: April 28, 2026 at 2:17 pm
லக்னோ, ஏப்.28, 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியின் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஐ.பி.எல் 2026 போட்டியில் நன்னடத்தை விதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது போட்டி கட்டணத்தின் 20% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு ‘டீமெரிட் பாயிண்ட்’ வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் எப்படி நடந்தது?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்ட் அணியுடன் மோதிய போது, 5வது ஒவரில் ரகுவன்ஷி அவுட் செய்யப்பட்டார். அப்போத அவர், தனது பேட்டால் பவுண்டரி கோட்டை அடித்தார். பின்னர், ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார். இந்த லெவல் 1 குற்றங்களுக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை, அபராதம், டீமெரிட் பாயிண்ட் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரகுவன்ஷி குற்றத்தை ஒப்புக்கொண்டு, போட்டியின் நடுவர் வழங்கிய தண்டனையை ஏற்றுக்கொண்டார். IPL வரலாற்றில் ‘Obstructing the field’ காரணமாக அவுட் செய்யப்பட்ட நான்காவது வீரர் ரகுவன்ஷி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மாட்ரிட் ஓபன் டென்னிஸ்.. சின்னர் முன்னேற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com