Paytm Payments Bank : இந்திய ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது.
Paytm Payments Bank : இந்திய ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது.

Published on: April 25, 2026 at 12:30 pm
புதுடெல்லி, ஏப்.25, 2026: இந்திய ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளது.
வங்கியின் எந்தவொரு வணிகச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்துக்கு, செயல்பாடுகளை முடிக்கும் போது, வைப்புத் தொகை கடன்களை முழுமையாகத் திருப்பிச் செலுத்த போதுமான திரவத்தன்மை உள்ளதாகவும் ஆர்.பி.ஐ தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், ஆர்.பி.ஐ தரப்பில் வெளியான அறிக்கையில், “இந்த நடவடிக்கை 2022 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட உத்தரவுகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்போது வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை நிறுத்த உத்தரவிடப்பட்டது.
பின்னர் 2024 தொடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, தற்போதைய வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் முன்பணம் செலுத்தும் கருவிகளில் புதிய வைப்புகள், கடன்கள் மற்றும் டாப்-அப்புகள் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திடீர் மழையால் பயிர்கள் சேதம்.. விவசாயிகளுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com