Selvaperunthagai: என் அலுவலகம் மற்றும் நான் தங்கி இருந்த இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது உண்மைதான் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
Selvaperunthagai: என் அலுவலகம் மற்றும் நான் தங்கி இருந்த இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது உண்மைதான் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

Published on: April 22, 2026 at 9:15 pm
சென்னை, ஏப்.22, 2026: காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக , அவரே சமூகவலைதளத்தில் தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்திருந்த நிலையில், செல்வபெருந்தகை வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்து இருந்தனர்.
வருமான வரித்துறை விளக்கம்
இந்த நிலையில் வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் ஒன்று வெளியானது. அதில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்வைல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், செல்வபெருந்தகை மீது வருமான வரித்துறை தரப்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வருமான வரி சோதனை சோதனை.. சிக்கலில் செல்வபெருந்தகை.. போலீசில் புகார்!
செல்வபெருந்தகை விளக்கம்
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அந்த விளக்கத்தில், “நான் தங்கி இருந்த இடம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஏப்ரல் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு வருமான வரித்துறை சோதனை தொடர்பான முழு ஆதாரங்களையும் வெளியிடுவேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ரூ.7.36 கோடி முதலீடு மிஸ்ஸிங்.. உதயநிதிக்கு எதிராக வருமான வரித்துறை.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com