Epic Mahavatar Parashuram in Works : காந்தாரா மூவி நிறுவனம் தயாரிப்பில் மகாவதார் பரசுராம் திரைப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Epic Mahavatar Parashuram in Works : காந்தாரா மூவி நிறுவனம் தயாரிப்பில் மகாவதார் பரசுராம் திரைப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: April 21, 2026 at 1:15 pm
பெங்களூரு, ஏப்.21, 2026: கிலீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து காந்தாரா படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்லே ஃப்ளிம்ஸ் வழங்கிய மகாவதார் நரசிம்மா திரைப்படம், திரையரங்குகளில் அமோக வரவேற்பைப் பெற்றுச் சாதனை படைத்தது.
அதே நிறுவனங்கள் இணைந்து மற்றொரு அனிமேஷன் புராணத் திரைப்படமான மகாவதார் பரசுராம் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஷ்வின் குமார் இயக்கத்தில், ஹோம்லே ஃப்ளிம்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட மகாவதார் நரசிம்மா திரைப்படம், இந்தியாவின் அதிக வசூல் ஈட்டிய அனிமேஷன் திரைப்படமாகத் திகழ்கிறது. இப்படம் வெளியான 10 நாட்களுக்குள்ளாகவே, கர்நாடக மாநிலத்தில் ₹6.5 கோடி வசூலித்தது. மேலும், உலக அளவிலும் இந்திய அளவிலும் சேர்த்து ₹105 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிச் சாதனை படைத்தது.
உணர்வுபூர்வமான கதை சொல்லல், புராணங்களின் ஆழம் மற்றும் உயர்தர அனிமேஷன் தொழில்நுட்பம் ஆகியவற்றின் துணையுடன், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இரு தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்த ஒரு முக்கியத் திரைப்படமாக இது உருவெடுத்தது. இந்நிலையில் நிறுவனம் தற்போது மகாவதார் பரசுராம் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமாயண இதிகாச படத்தில் இணைந்த இளையராஜா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com