பழனிசாமியை பார்த்து இந்தியாவே சிரிக்கிறது.. மு.க ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்

Stalin Mocks Palaniswami : பழனிசாமியை பார்த்து இந்தியாவே சிரிக்கிறது என மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

Published on: April 18, 2026 at 10:31 pm

சென்னை, ஏப்.18, 2026: “பழனிசாமி அவர்களே, இனி பா.ஜ.க.வின் சட்டங்களுக்கு முட்டு கொடுக்கும்போது முந்திரிக்கொட்டை போல முந்திக் கொள்ளாதீர்கள்” என மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின், “2026 தேர்தலில் கோவை தி.மு.க.வின் கோட்டையாக வலிமை பெறும்! நீலகிரி மாவட்டத்திலும் NDA கூட்டணி நினைத்துப் பார்க்காத வித்தியாசத்தில் தோல்வியுறும்!” எனத் தெரிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலின் ட்வீட்

மேலும், “டபுள் எஞ்சின்’ அரசு இருந்தால்தான் வேலைகள் விரைவாக நடக்கும் என்று கோவையில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி; உங்கள் வேகம் எப்படி இருக்கும் என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்த்தே தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ள மு.க ஸ்டாலின், “தங்களின் வருகைக்கு நன்றி! Next, அடுத்த தேர்தல் சீசனில் சந்திப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “கருப்புச் சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றினால் தொகுதி மறுவரையறை நின்றுவிடுமா?” எனக் கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது” எனவும் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: மோடி அரசின் திட்டம் தோல்வி.. டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு.. மு.க ஸ்டாலின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com