Prakash Raj : நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யை விமர்சித்து பேசியது விவாதங்களை எழுப்பியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Prakash Raj : நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யை விமர்சித்து பேசியது விவாதங்களை எழுப்பியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Published on: April 18, 2026 at 2:51 pm
சென்னை, ஏப்.18, 2026: நடிகர் பிரகாஷ் ராஜ், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, “இங்கு மூன்று மாடல்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஒன்று திராவிட மாடல், மற்றொன்று அடிமை மாடல். அடுத்து சினிமா மாடல்” என்றார்.
தொடர்ந்துப் பேசிய பிரகாஷ் ராஜ், “திராவிட மாடல் கல்வியை கொடுத்தது. மொழி மானத்தை காப்பாற்றியது. தற்போது இனமானத்தை காப்பாற்ற போராடி வருகிறது” என்றார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வை விமர்சித்த பிரகாஷ் ராஜ், “அடிமை மாடல் சுயமரியாதை மற்றும் தன்மானத்தை மோடியின் கால்களில் போட்டுள்ளது” என்றார்.
இந்த நிலையில் விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ், “சினிமாவில் ஒரே படத்தில் மருத்துவராகலாம், பொறியாளராகலாம், ஏன் முதல்வராகக் கூட ஆகலாம். ஆனால் அரசியலில் எடுத்தவுடனேயே முதல்வர் ஆகிவிட முடியுமா? எனக் கேள்வியெழுப்பினார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜ்-ஐ களமிறக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அவர் விஜய்யை விமர்சித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இதையும் படிங்க: மோடி அரசின் திட்டம் தோல்வி.. டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு.. மு.க ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com