திசையன்விளையில் அண்ணாமலை வாக்குசேகரிப்பு.. எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டினார்!

Annamalai : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக, அண்ணாமலை வாக்கு திரட்டினார்.

Published on: April 15, 2026 at 11:06 pm

Updated on: April 16, 2026 at 12:06 am

திசையன்விளை, ஏப்.15, 2026: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை நகரில் இன்று (புதன்கிழமை) மாலை 7 மணிக்கு மேல், தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வாக்கு திரட்டினார். அப்போது அவருக்கு பா.ஜ.க, அ.தி.மு.க. த.மா.கா, அ.ம.மு.க., பெருந்தலைவர் மக்கள் கட்சி என கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலத்த வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய அண்ணாமலை, “ராதாபுரம் தொகுதியில் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துபவர் பாலகிருஷ்ணன். அவருக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இங்கு வந்திருக்கும் கூட்டம் அப்பாவுவை அகற்ற வந்திருக்கும் கூட்டம்” என்றார்.

மேலும், “திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 54 கல் குவாரிகளில் 53 சட்ட விரோதமாக செயல்பட்டன. இதற்காக ரூ.250 கோடிக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், பின்னாள்களில் கலெக்டர் மாற்றப்பட்டார். அபராதம் ரூ.13 கோடியாக குறைக்கப்பட்டது” என்றார்.

கருணாநிதி சிலை வைக்க பாடுபட்ட அப்பாவு

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கடந்த 5 ஆண்டுகளாக வள்ளியூரில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்க போராடினார். அதில் அவர் தோற்றுப் போனார். இதுதான் கடந்த 5 ஆண்டுகளாக அவர் போராடியது” என்றார்.

மேலும், இங்கு வந்திருக்கும் நபர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று தாமரைக்கு வாக்கு சேகரியுங்கள். ராதாபுரம் தொகுதியில் தாமரை மலரட்டும்” என்றார். முன்னதாக, உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என தி.மு.க.வினர் ஸ்கேன் செய்து எடுத்துவிடுவார்கள்” என்றும் அண்ணாமலை கூறினார்.

இதையும் படிங்க: தி.மு.க vs பா.ஜ.க நேரடி மோதல்.. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிக் கனி யாருக்கு?

மகத்தான தமிழ் கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று புதிய வெற்றி சிகரங்களை அடைவோம்.. பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து! Narendra Modi

மகத்தான தமிழ் கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று புதிய வெற்றி சிகரங்களை அடைவோம்.. பிரதமர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com