Assembly Election 2026: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிக் கனி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பிரதான போட்டி தி.மு.க.வின் அப்பாவு, பா.ஜ.க.வின் பாலகிருஷ்ணன் இடையே ஏற்பட்டுள்ளது.
Assembly Election 2026: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிக் கனி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பிரதான போட்டி தி.மு.க.வின் அப்பாவு, பா.ஜ.க.வின் பாலகிருஷ்ணன் இடையே ஏற்பட்டுள்ளது.

Published on: April 15, 2026 at 9:37 pm
திருநெல்வேலி, ஏப்.15, 2026: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் யார் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இது சபாநாயகர் மு. அப்பாவு போட்டியிடும் நட்சத்திர அந்தஸ்து தொகுதியாகும். இந்தத் தொகுதியை இழந்து விடக் கூடாது என தி.மு.க. மும்முரமாக பணி செய்துவருகிறது.
மறுபுறம், எப்படியாவது ராதாபுரத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என பா.ஜ.க.வும் தீவிரம் காட்டுகிறது. இத்தொகுதியை பொறுத்தமட்டில் விவசாய பெருங்குடி மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள்.
இந்த நிலையில், இத்தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தி.மு.க.வின் அப்பாவு, பா.ஜ.க.வின் பாலகிருஷ்ணன் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் தாமரை கிரிஜா பாண்டியன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் சதீஷ் கிறிஸ்டோபர் ஆகியோர் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெறுவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
கடந்த கால தேர்தல்
2021 சட்டமன்ற தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட மு. அப்பாவு வாங்கிய வாக்குகள் 82,331, (44.14 சதவீதம்) ஆகும். இரண்டாம் இடம் பெற்ற அ.தி.மு.க.வின் இன்பத்துரை வாங்கிய வாங்குகள் 76,406 (40.99 சதவீதம்) ஆகும்.
இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 5,925 ஆக இருந்தது. அதாவது, 3.50 சதவீத வாக்குகளில் அப்பாவு வெற்றிப் பெற்றார். மறுபுறம், நாம் தமிழர் 10.39 சதவீத வாக்குகளுடன் (19,371) மூன்றாம் இடம் பெற்றிருந்தது.
ராதாபுரம் தொகுதியை பொறுத்தமட்டில், கடந்த காலங்களில் பா.ஜ.க. தனித்து நின்றே 22 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றுள்ளது. அதேநேரம் கடந்த தேர்தலில் தே.மு.தி.க. இத்தொகுதியில் 2,432 வாக்குகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேங்கைவயல், மது விலக்கு.. வி.சி.க. நிலைபாடு என்ன? தொல். திருமாவளவன் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com