டாப் கியர் போட்ட இந்திய பங்குச் சந்தை.. முதலீட்டாளர்கள் காட்டில் பண மழை!

Share Market Today: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் , தேசிய பங்குச் சந்தை நிஃப்டி ஆகிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், இன்றைய வர்த்தகத்தில் சுமார் 4% உயர்ந்துள்ளன.

Published on: April 8, 2026 at 7:30 pm

மும்பை, ஏப்.8, 2026: இந்திய பங்குச் சந்தை இன்று பெரும் உயர்வு கண்டது. வாஷிங்டன் மற்றும் தேஹ்ரான் இடையே இரண்டு வாரங்களுக்கு சமாதான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எண்ணெய் விலை குறைந்ததால், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சுமார் 4% உயர்ந்தன.

இந்நிலையில், சென்செக்ஸ் 2,946 புள்ளிகள் உயர்ந்து 77,563-இல் முடிந்தது. நிப்டி 874 புள்ளிகள் உயர்ந்து 23,997-இல் நிலை கொண்டது. மிட்-கேப் 100 4% மேல் உயர்வாக காணப்பட்டது. தொடர்ந்து, ஸ்மால்-கேப் 100 4.4% உயர்வு கண்டது.

பங்குகள் உயர்வு

நிறுவன பங்குகளை பொறுத்தவரை இண்டிகோ (+8.2%), லார்சன் அண்ட் டர்போ (+7.6%), பஜாஜ் ஃபைனான்ஸ் (+7%) உயர்வை கண்டன.
டெக் மகிந்திரா (-1.5%), சன் பார்மா (-0.3%), பவர் கிரிட் (-0.2%) உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்றைய சந்தையை நிலையை பொறுத்தவரை பெருமளவு உயர்வு கண்டது. மே 2025-க்கு பிறகு, ஒரே நாளில் மிகப்பெரிய உயர்வு இதுவாகும்.

இதையும் படிங்க: ரூ.2 லட்சம் கோடி சந்தை.. இந்தியாவின் முதுகெலும்பு தொழில் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com