மக்களின் கவனம் ஈர்த்த எம்.பி.. ராகவ் சதா-வுக்கு எதிராக ஆம் ஆத்மி.. பின்னணி என்ன?

Chadha Faces Ouster in Rajya Sabha : ஆம்ஆத்மி கட்சி (ஏ.ஏ.பி) ராகவ் சதா எம்.பி.யை ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்து நீக்க முயற்சிக்கிறது. இதற்கு என்ன காரணம்?

Published on: April 4, 2026 at 12:41 pm

புதுடெல்லி, ஏப்.4, 2026: பாராளுமன்றத்தில் தனது நடவடிக்கைகளால் நாடு முழுக்க கவனம் ஈர்த்தவர் ராகவ் சதா. ஆம் ஆத்மி எம்.பி.யான இவரை ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க ஆம் ஆத்மி முயற்சிக்கிறது.

என்ன காரணம்?

ராகவ் சதா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் கருத்து முரண்பாடுகளை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சிச் செயல்பாடுகளில் குறைந்த பங்கேற்பு அளித்துள்ளார்.
அதாவது, முக்கியக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்காமல் இருந்ததால், கட்சியிலிருந்து விலகி வருகிறார் என்ற எண்ணம் உருவானது. இதற்கிடையில், தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பாராளுமன்ற விவாதங்களில் அவர் அதிகம் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

புதிதாக யாருக்கு வாய்ப்பு?

ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. அசோக் மிட்டல் என்பவரை புதிதாக நியமிக்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது, அசோக்கை மாற்றாக துணைத் தலைவராக நியமிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்காவின் அடிமை மோடி.. பிரியங்கா காந்தி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com