Ekta Kapoor: நான் ஒரு அப்பாவி எனக்கு எதுவும் தெரியாது என நாகினி தொடர் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெரிவித்துள்ளார்.
Ekta Kapoor: நான் ஒரு அப்பாவி எனக்கு எதுவும் தெரியாது என நாகினி தொடர் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெரிவித்துள்ளார்.

Published on: March 24, 2026 at 6:22 pm
மும்பை மார்ச் 24, 2026; நாகினி 7 தொடரின் சில எபிசோட்களில், ஏ.ஐ செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தியதற்காக ரசிகர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்கு, தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தனது பதிலை அளித்துள்ளார். அவர், இந்த விவகாரத்தை இலகுவான முறையில் எடுத்துக்கொண்டு, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த வீடியோவின் மூலம் விளக்கம் அளித்தார்.
அதில், “என் செயற்கை தொழில்நுட்ப எபிசோடுகளுக்காக எனக்கு இவ்வளவு வெறுப்பு வருகிறது; இதில் சில பட்ஜெட் குறைபாடுகள் இருந்திருக்கலாம்” என தெரிவித்தார். முன்னதாக எனக்கு ஒன்றும் தெரியாது நான் ஒரு அப்பாவி, இதற்கெல்லாம் காரணம் அந்த எழுத்தாளர்கள் தான் என நகைச்சுவையாக கூறியிருந்தார்.
இந்திய அளவில் மிகப் பிரபலமாக தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கும் தொடர் நாகினி. தற்போது இதை ஏழாம் பாகத்தை எட்டி உள்ளது; இந்தத் தொடரில் டிராகன் முக்கிய எதிரியாக மாறி உள்ளது; இந்தத் தொடரின் சில காட்சிகள் ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகின என்பதை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; துரந்தர் படத்தை பார்க்காத தீபிகா படுகோன்.. என்ன காரணம்? ரசிகர்கள் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com