ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்!

M Christopher Tilak: ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார் என சமீபத்தில் மாநிலங்களவைக்கு தேர்வான கிரிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார்.

Published on: March 23, 2026 at 6:05 pm

சென்னை மார்ச் 23, 2026; தமிழ்நாட்டில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வான காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பிரத்தேக பேட்டி அளித்திருந்தார்.
அதில் ராகுல் காந்தி குறித்து மனம் திறந்த அவர், ” காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் போராட்டம் நடத்தி வருகிறார்” என்றார்.

மேலும் தாம், “பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் என அனைவருக்காகவும் மாநிலங்களவையில் குரல் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

இது தொடர்பாக பேசிய கிறிஸ்டோபர் திலக், “ராஜ்யசபாவுக்கு காங்கிரஸ் சார்பில் நான் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இது எனக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இது காங்கிரஸ் கட்சி எவ்விதத்தில் முன்னேறி வருகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது, குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலத்தில். எனது தேர்வை சுற்றி மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. எனக்கு மிகப் பெரிய பொறுப்பு இருப்பதாக நான் உணர்கிறேன்” என்றார்.

தொடர்ந்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, மற்றும் ராகுல் காந்தியின் தலைமை குறித்து பேசிய கிறிஸ்டோபர் திலக், ” முதல் இரு தலைவர்களுக்கும் தற்போதைய ராகுல் காந்தியின் அணுகுமுறைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன; காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி இருந்த காலகட்டம் வேறு, தற்போது மல்லிகார்ஜுன் கார்கே உரிய முறையில் காங்கிரசை வளர்த்தெடுத்து வருகிறார்; ராகுல் காந்தியின் அணுகுமுறை முற்றிலும் வேறுபாடானது. அவர் இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வர விரும்புகிறார்; அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்சிக்கு தேவை” என்றார்.

மேலும் கட்சியில் ராகுல் காந்தி சில மாற்றங்களை கொண்டு வருகிறார் என்றும் அதற்காக அவர் உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தி வருகிறார் என்றும் கிறிஸ்டோபர் திலக் கூறினார்.

இதையும் படிங்க; மேற்காசிய மோதல்.. பெரும் சவால்களை சந்திக்கும் இந்தியா.. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com