Namakkal | நாமக்கல்லில் கால்பந்து விளையாட சென்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
Namakkal | நாமக்கல்லில் கால்பந்து விளையாட சென்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
Published on: September 14, 2024 at 10:22 am
Namakkal | நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் மேட்டுத் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் இனியவன். 15 வயதான இவர் பொம்மைகுட்டை மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர் தனது நண்பர்களுடன் சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து விளையாடச் சென்றார். அப்போது பந்து எடுக்கச் சென்றபோது கட்டடம் அருகில் சென்ற மின் கம்பியில் கை பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மின்சாரம் தாக்கி பள்ளி சிறுவன் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ‘விஜய் வந்தாலும் தி.மு.க. வெற்றிபெறும்’: ஆனால்.. திருமாவளவன் ட்விஸ்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com