தமிழகத்தில் தனித்து நின்று பாஜகவால் ஒரு தொகுதியாவது வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ் சவால்!

Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார் சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம்.

Published on: March 22, 2026 at 1:38 pm

சென்னை மார்ச் 22, 2026; தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா எங்கு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள, முன்னாள் முதலமைச்சரும் சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான ஓ பன்னீர்செல்வம், அவர்களால் தனித்து நின்று ஒரு தொகுதியில் ஆவது வெற்றி பெற முடியுமா எனவும் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது; அதன்படி ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது; இதில் பதிவான வாக்குகளின் முடிவுகள் மே மாதம் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. மாநிலத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வைக்கின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது; இது தவிர பல்வேறு சிறிய கட்சிகளும் கூட்டணியில் உள்ளன.

ஓ பன்னீர்செல்வம் சவால்

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரும் சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான ஓ பன்னீர்செல்வம் பாஜகவுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்; அதில், ” 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக இருக்கிறதா? அவர்களால் தனித்து நின்று ஒரு தொகுதிகளாவது வெற்றி பெற முடியுமா? என்றார்.

இதையும் படிங்க; திமுக கூட்டணியில் இருந்து விலகல்.. வேல்முருகன் அறிவிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com