Guindy Children’s Park: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா பறவைக் காய்ச்சல் காரணமாக காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது.
Guindy Children’s Park: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா பறவைக் காய்ச்சல் காரணமாக காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது.

Published on: March 21, 2026 at 4:23 pm
சென்னை, மார்ச் 21 2026: சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா பகுதியில் பறவைக் காய்ச்சல் (Avian Influenza – H5N1) பரவல் காரணமாக சுமார் 40 பறவைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா காலவரையற்ற முறையில் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் உள்ள வேடந்தாங்கல் அவியரி பிரிவில் மார்ச் 13ஆம் தேதி முதல் திடீரென பறவைகள் இறக்கத் தொடங்கின. கொக்கு, பெலிகன் உள்ளிட்ட பல இனங்களை சேர்ந்த பறவைகள் தொடர்ந்து உயிரிழந்தது. இதனால் அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்று மேலும் பரவாமல் தடுக்க பூங்கா வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு, கண்காணிப்பு மற்றும் உயிர் பிழைத்துள்ள பறவைகளின் உடல்நிலை பரிசோதனை போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கிடைக்கும் பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருக்கும் வரை பூங்கா மூடப்பட்டே இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க; எத்தனை கூட்டணி வந்தாலும் திமுக வெற்றி பெறும்.. தொல். திருமாவளவன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com