Maharashtra: மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர், சர்ச்சைக்குரிய சாமியாருடன் நட்புறவில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
Maharashtra: மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர், சர்ச்சைக்குரிய சாமியாருடன் நட்புறவில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

Published on: March 21, 2026 at 10:32 am
மும்பை, மார்ச் 21 2026; மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர், சர்ச்சைக்குரிய சாமியாருடன் நட்புறவில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக சர்ச்சைக்குரிய ஆன்மீக குரு மீது 35 வயதான பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்தார்; அந்த புகாரில் ஆன்மீக குரு தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தார் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தன்னைத் தானே குருவாக அறிவித்த அசோக் கராட், என்ற மகராஷ்டிரா ஆன்மீக குரு நாசிக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், சகாங்கர் மற்றும் கராட் இணைந்து இருக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் சகாங்கர், கராடின் கால்களை கழுவுவது, அவருக்கு கேக் ஊட்டுவது, அவருக்காக குடை பிடிப்பது, மேலும் அவரை ‘குரு’ என்று அழைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சகாங்கரின் ராஜினாமாவை வலியுறுத்தி வந்தன. இதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக, மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க; வங்கதேச பிரதமரின் முதல் பயணம் இந்தியாவா? சீனாவா? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com