Salem Bus Crash: சேலத்தில் அரசு பேருந்து விபத்தில் சிக்கி நிலையில் 8 பேர் உயிரிழந்தனர்.
Salem Bus Crash: சேலத்தில் அரசு பேருந்து விபத்தில் சிக்கி நிலையில் 8 பேர் உயிரிழந்தனர்.

Published on: March 20, 2026 at 4:37 pm
சேலம், மார்ச் 20, 2026: சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் அருகே, அரியானூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக (TNSTC) பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, நடுவழி தடுப்பைக் கடந்து எதிர்புற பாதையில் சென்றது. அப்பகுதியின் CCTV காட்சிகளில், பேருந்து நேருக்கு நேர் எதிர்புறம் வந்த டெம்போ வகை சரக்கு ஆட்டோவும், இருசக்கர வாகனத்தையும் மோதியிருப்பது பதிவாகியுள்ளது.
ஆதாரங்களின் தகவலின்படி, அந்த சரக்கு ஆட்டோவில் 10-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையில், சேலம் அருகே அரியானூரில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள், செல்வராஜ், முருகன், அமுதா, மணிகண்டன், இருசாயி, மணிகண்டனின் மனைவி சத்யா, ஐந்து வயது நிதிஷா, 11 மாத குழந்தை ஜீவிகா ஆகியோர் ஆவார்கள். மேலும் இருவர் தீவிர நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்தவர்கள் பெரும்பாலும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சேலம் – உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 20, 2026
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்துக்கு பேருந்துகள் உரிய முறையில் பராமரிக்காததுதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்த்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிகிச்சையில் உள்ள நபர்கள் விரைந்து குணமடையவும் பிரார்த்தித்துள்ளார்.
இதையும் படிங்க: வயதான காலத்திலும் டெல்லிக்குப் பறந்தவர் கருணாநிதி..அதிமுக அக்டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com