Selvaperunthagai: எங்களது வேதனையை தோழமைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார்.
Selvaperunthagai: எங்களது வேதனையை தோழமைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார்.

Published on: March 19, 2026 at 5:50 pm
சென்னை, மார்ச் 19, 2026: “எங்களது வேதனையை தோழமை கட்சிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்க அ.தி.மு.க.வும், ஆட்சியை தக்க வைக்க தி.மு.க.வும் போட்டிப் போட்டு வருகின்றன.
தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிகப்பட்சமாக 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2021ல் வழங்கப்பட்ட 6 தொகுதிகள் வழங்கப்படவில்லை; 2026 சட்டமன்ற தேர்தலில் தொகுதிகள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால், மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் வழஙகுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கருத்துக்கள் வெளியாகின.
செல்வபெருந்தகை பேட்டி
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த அவர், “காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்டு தொகுதிகள் கேட்க வேண்டாம். இதனை தோழமை கட்சிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், 110 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது 28 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மோடி மீது விமர்சனம்
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வை விமர்சித்த செல்வபெருந்தகை, “எதாவது மாயாஜாலம் செய்தாவது வெற்றிப் பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். எந்த மோடி மஸ்தான் வேலை செய்தாலும், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் 210 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்” என்றார்.
இதையும் படிங்க: எல்லாம் வல்ல இறைவன் அருளால்.. த.வெ.க தலைமையில் ஆட்சி.. இப்தார் நோன்பு விழாவில் விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com