உடலுக்கு ஆரோக்கியம்; கருவேப்பிலை துவையல்: இதை விட ஓர் சைடீஸ் வேண்டுமா?

Food | உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருவேப்பிலை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Published on: September 13, 2024 at 3:15 pm

Updated on: September 13, 2024 at 3:16 pm

Food | தலைமுடி வளர்ச்சியை தூண்டக்கூடிய உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கருவேப்பிலை துவையல் வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நன்மை தரும். இந்த கருவேப்பிலை துவையலை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

கருவேப்பிலை -2 கப்
எண்ணெய் -3 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -3 டீஸ்பூன்
கடலை பருப்பு -3 டீஸ்பூன்
வர மிளகாய் – 6 (காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -6
இஞ்சி – 2 துண்டு
பூண்டு -10 பல்லு
புளி – சிறிதளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை

முதலில் கருவேப்பிலையை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பினை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனுடன் வர மிளகாய், சிறிய வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அடுப்பு தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து வறுக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் கருவேப்பிலை மற்றும் சிறிது புளி சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும். பின்னர் அடுப்பினை ஆப் செய்து இந்த கலவையின் சூடு தணிந்த பின்னர் துவையலுக்கு தேவையான உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் துவையல் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஹெல்தியான கருவேப்பிலை துவையல் தயார். இது ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் வெறும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க : வெளியூர் போறீங்களா, ஈஸியா பொட்டலம் கட்டலாம்: லெமன் ரைஸ் இப்படி ட்ரை பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com