IIT Delhi: டெல்லி ஐ.ஐ.டி. இந்திய தொழில்நுட்பக் கழகம் நடப்பாண்டின் (2026) கோடை ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் படிப்புக்காக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
IIT Delhi: டெல்லி ஐ.ஐ.டி. இந்திய தொழில்நுட்பக் கழகம் நடப்பாண்டின் (2026) கோடை ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் படிப்புக்காக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Published on: March 18, 2026 at 11:12 am
புதுடெல்லி, மார்ச் 18, 2026: டெல்லி ஐ.ஐ.டி. இந்திய தொழில்நுட்பக் கழகம் நடப்பாண்டின் (2026) கோடை ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் படிப்புக்காக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டம் எம்.டெக் மற்றும் எம்.இ மாணவர்களுக்கு (மற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து) பொருந்தும். அந்த வகையில், மாணவர்கள் ஐ.ஐ.டி டெல்லியில் ஆராய்ச்சி அனுபவம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) டெல்லி தனது 2026 கோடை ஆராய்ச்சி புலமைப்பரிசு திட்டத்திற்கான விண்ணப்பங்களை அழைக்கிறது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த 8 வார ஃபெல்லோஷிப் எம்.டெக் மற்றும் எம்.இ மாணவர்களுக்கு டெல்லி ஐ.ஐ.டி பேராசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
இதற்கு மார்ச் 16, 2026 முதல் ஏப்ரல் 3, 2026 வரை முதல் விண்ணப்பிக்கலாம். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் மே மாதத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மே 13 முதல் ஜூலை 13, 2026 வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், Zoho புரிந்துணர்வு ஒப்பந்தம்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com