Pakistan Airstrike: ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 400 உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து பாகிஸ்தானை இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Pakistan Airstrike: ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 400 உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து பாகிஸ்தானை இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Published on: March 17, 2026 at 2:15 pm
புதுடெல்லி, மார்ச் 17 2026: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் உயிரிழந்தனர். மேலும், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததை தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல் “மிருகத்தனமானது, கோழைத்தனமானது, மனசாட்சியற்றது” எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “ஒரு படுகொலையை இராணுவ நடவடிக்கையாக காட்ட பாகிஸ்தான் முயற்சிக்கிறது” என்றும் குற்றம்சாட்டியுள்ளது. முஸ்லிம்களுக்கு புனிதமான ரமலான் காலத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மேலும் கண்டனத்திற்குரியது என்றும் கூறப்பட்டுள்ளது. “ஒரு மருத்துவமனையையும் அதன் நோயாளிகளையும் குறிவைப்பதை எந்த நம்பிக்கையோ சட்டமோ நியாயப்படுத்த முடியாது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காபூல் மருத்துவமனை மீது பாக். கொடூர தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு
இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது மட்டுமல்லாது, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் நேரடி அச்சுறுத்தல் என இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்கச் செய்ய சர்வதேச சமூகமும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் காபூலில் உள்ள 2,000 படுக்கைகள் கொண்ட போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனையில் நேற்று (திங்கள்கிழமை) இரவு நடைபெற்றது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாகிஸ்தான், தாங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைக்கவில்லை என்றும், ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த தாக்குதல், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஐக்கிய அரபு அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com