நெல்லை அருகே திகில்: எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்பு

Thisayanvilai: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published on: March 17, 2026 at 10:53 am

திசையன்விளை, மார்ச் 17 2026: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் பெட்டைக்குளம் அருகே ஒரு கார் முழுமையாக எரிந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காரை பரிசோதித்தபோது, அதில் ஒரே 4 பேர் எரிந்த நிலையில் சடலங்களாக கிடந்தது கண்டறியப்பட்டது. சடலங்கள் முற்றிலும் எரிந்துள்ளதாக அவர்கள் யார் என்பது குறித்து கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்ட விசாரணையில் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அப்பகுதி மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கார் விபத்துக்குப் பிறகு தீப்பற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிய தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். கார் எரிந்ததற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வள்ளியூர்: குடும்பத் தகராறில் மனைவியை அறிவாளால் தாக்கிய கணவன் கைது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com