Valliyur: நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Valliyur: நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published on: March 17, 2026 at 10:34 am
வள்ளியூர், மார்ச் 17 2026: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மார்க்கெட் அருகே பணகுடியைச் சேர்ந்த சேர்மதுரை(42) என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த சேர்மதுரை தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அறிவாளால் தனது மனைவியை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியுள்ளார்.
அவருக்கு கைகளில் தோள்பட்டை மற்றும் முழங்கைகளில் காயம் ஏற்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் அவரது மனைவி ரத்தக்காயங்களுடன் கீழே சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு, சேர்மதுரையைப் பிடித்து தர்ம அடி கொடுத்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம், வள்ளியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:24 வயது மனைவியை சரமாரிய வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி.. நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com