Annamalai Responds to Vijay Alliance Question: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
Annamalai Responds to Vijay Alliance Question: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

Published on: March 16, 2026 at 6:13 pm
சென்னை, மார்ச் 16, 2026: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை பதிலளித்தார். செய்தியாளரின் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜயுடனான கூட்டணி விவகாரத்தைப் பொறுத்தவரை யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என எடப்பாடி கூறியுள்ளார். அதுதான் இறுதி கருத்து. அவர்தான் முதல்வர் வேட்பாளர்; அவரது கருத்துதான் இறுதி கருத்து” என்றார்.
கரூர் ஆட்சியாளரை மாற்ற கோரிக்கை
முன்னதாக தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “கரூர் மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும்” என்றார். இது குறித்து பேசிய அவர், “திமுகவிற்கு ஆதரவாக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கரூர் ஆட்சியர் மற்றும் எஸ்பியை மாற்ற வேண்டும்” என்றார்.
மேலும், “அதிமுக உறுப்பினர்கள் பலர் மீது பொய் வழக்குகளை போட்டு சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள்; பாஜக தொண்டர்களுக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள்” எனவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: திமுக தோல்விக்கு பாஜக காரணம்.. டி.கே.எஸ் இளங்கோவன் ஃபிளாஷ்பேக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com