OG படத்துக்கு ‘A’ சான்றிதழ்.. ஜனநாயகன் பற்றி பவன் கல்யாண்!

Pawan Kalyan on Jana Nayagan Film Row: நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சான்றிதழ் கிடைக்காமல் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பவன் கல்யாண் பேசியுள்ளார்.

Published on: March 16, 2026 at 5:56 pm

அமராவதி, மார்ச் 16, 2026: ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விஜயின் ‘ஜன நாயகன்’ வெளியீட்டு தாமதம் குறித்து கூறுகையில், “வெளியீட்டு தாமதத்திற்கு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது நியாயமல்ல; திரைப்பட சான்றிதழ் வழங்கும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி) அரசியல் செல்வாக்கின்றி சுயாதீனமாக செயல்படுகிறது” என்றார்.

தொடர்ந்து, “இந்த நிலைமை அரசியல் அழுத்தம் அல்ல, மாறாக சென்சார் வாரியத்தின் நடைமுறைச் சிக்கல்களால் ஏற்பட்டதாகத் தெரிகிறது” எனவும் பவன் தெரிவித்தார். மேலும், “ஜன நாயகன் பிரச்சினை சென்சார் வாரியத்தில் சரியாக கையாளப்படவில்லை. அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை குற்றம் சாட்டுகிறார்கள், அது சரியல்ல” எனவும் பவன் கல்யாண் இந்தியா டுடே-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ஓஜி திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்ததையும் அவர் குறிப்பிட்டு பேசினார். இது தொடர்பாக பேசிய அவர், “படத்தில் கடுமையான வன்முறை காட்சிகள் உள்ளதால், ‘A’ சான்றிதழ் வழங்கப்படுவது முறையானது” என்றார்.

இதையும் படிங்க: இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி.. தாய்கிழவியை பாராட்டிய கமல்ஹாசன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com