அதிக வெற்றி கொடுத்தால் அமைச்சர் பதவி.. மு.க ஸ்டாலின்!

Ministerial Role Promised for M K Stalin: “2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது இலக்கு” என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், கட்சியினர் குழப்பம் ஏற்படுத்தினால் உடனடி நடவடிக்கை பாயும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Published on: March 16, 2026 at 4:07 pm

சென்னை, மார்ச் 16, 2026: சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது இலக்கு” எனத் தெரிவித்தார். தொடர்ந்து மு.க ஸ்டாலின், “தேர்தலில் நாம் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 200 தொகுதிகளில் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்றுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், “தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்னையும் இருக்கக் கூடாது என வலியுறுத்திய மு.க ஸ்டாலின், “யாராவது தேவையின்றி குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால், எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும்” என்றார். இதுமட்டுமின்றி, “அமைச்சர் பதவி என்பது அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே என்பதை அழுத்தம் திருத்தமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” எனவும் மு.க ஸ்டாலின் கூறினார்.

ட்விட்டர் பதிவு

மேலும், மு.க ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை” எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர், “உழைப்பை அள்ளிக் கொடுங்கள்; உதயசூரியன் உதிக்கட்டும்; ஏப்.23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும், நமது கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 24 வயது மனைவியை சரமாரிய வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி.. நடந்தது என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com