Assembly Election 2026 : தமிழக மக்களை காப்பதற்காக தான் கூடுதலாக மூன்று தொகுதிகளை வாங்கி உள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர், செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
Assembly Election 2026 : தமிழக மக்களை காப்பதற்காக தான் கூடுதலாக மூன்று தொகுதிகளை வாங்கி உள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர், செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Published on: March 15, 2026 at 1:37 pm
சென்னை மார்ச் 15, 2026; தமிழக மக்களை காப்பதற்காக தான் திமுக கூட்டணியில் கூடுதலாக மூன்று தொகுதிகளை கேட்டு பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ.
திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுகளில், திமுகவுக்கு பெரும் தலைவலியை காங்கிரஸ் ஏற்படுத்தியது; அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என திமுகவுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என உறுதிப்பட தெரிவித்தார்.
எனினும் காங்கிரசார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்; இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தை காட்டி, திமுகவை காங்கிரஸ் மிரட்டுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக காங்கிரஸ் கூட்டணியில் யாரும் எதிர்பாராத வண்ணம், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது.
அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு, திமுக கூட்டணியில் 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தலிலும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து திமுக கூட்டணியில், மதிமுக கட்சிக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது; அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக இம்முறை நான்கு தொகுதிகளாக சுருங்கி உள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா நான்கு தொகுதிகள் வழங்க திமுக முன்வந்துள்ளது.
இதனால், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளார்கள்; காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்டதால் எங்களது பகுதிகளை குறைத்துக் கொள்ளும்படி அவர்கள் கேட்கிறார்கள் என கூறினார்கள்.
இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ, தமிழக மக்களின் நலனுக்காக…. என தெரிவித்துள்ளார்.
காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஏன்?
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ, ” முதலில் தோழமைக் கட்சிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்; தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக கூடுதலாக மூன்று தொகுதிகளை கேட்டு மனநிறைவோடு வாங்கி உள்ளோம்.
அந்த வகையில் உங்களின் உரிமையை நீங்கள் கேளுங்கள்; முதலமைச்சருக்கு மனம் இருக்கிறது. சீட் இருந்தால் அவர் நிச்சயம் கொடுப்பார்” என்றார்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக ஏன் கொடுத்தீர்கள் என்றால் எப்படி என கேள்வி எழுப்பி உள்ள செல்வப் பெருந்தகை, எங்களுடைய மன வேதனையை தோழமைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க; பொம்மை ஆட்சியாளர்கள்.. அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன குழப்பம்.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com