பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்..அகிலேஷ், ராகுல் மீது கேசவ் பிரசாத் குற்றச்சாட்டு

Keshav Prasad: உலகளாவிய நெருக்கடி நிலை இருக்கும் நேரத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக உத்திர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா குற்றம் சாட்டியுள்ளார்.

Published on: March 14, 2026 at 12:30 pm

பிரயாக்ராஜ், மார்ச் 14 2026: எரிவாயு பற்றாக்குறை குறித்த குற்றச்சாட்டுகளை முன்னிட்டு, உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.

அதனால் தான் அவர்களை ‘அஃப்வா காந்தி’ மற்றும் ‘அஃப்வா யாதவ்’ என்று நான் அழைக்கத் தொடங்கினேன். உலகளாவிய நெருக்கடி நிலை இருக்கும் நேரத்தில், நாட்டிற்கு ஏதேனும் சவால் ஏற்பட்டால் அதை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்வோம் என்ற செய்தியை பொறுப்பான தலைவர்கள் வழங்க வேண்டும். ஆனால் உண்மையில் அத்தகைய நெருக்கடி எதுவும் இல்லை.

முன்னதாக தினமும் சுமார் 50–55 லட்சம் எல்பிஜி சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. ஆனால் அவர்கள் பரப்பிய தவறான தகவல்களால், தற்போது ஒரு நாளைக்கு 75 லட்சத்திற்கும் மேல் முன்பதிவுகள் உயர்ந்துள்ளன. இந்த வகையான பிரச்சாரம் மிகவும் மோசமானதும் கண்டிக்கத்தக்கதுமான அரசியல் விளையாட்டு,” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; எல்.பி.ஜி பிரச்சனைக்கு தீர்வு.. வருகிறது 2 கப்பல்.. ஈரான் அனுமதி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com