தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக நடக்க முடியும்? டிடிவி தினகரன்!

TTV Dhinakaran: பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published on: March 12, 2026 at 1:19 pm

Updated on: March 12, 2026 at 2:12 pm

சென்னை, மார்ச் 12, 2026: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரக் கொலை – பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இதையும் படிங்கதூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொடூர கொலை..6 தனிப்படைகள் அமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 14வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது விளாத்திக்குளம் அருகே அரங்கேறியிருக்கும் இச்சம்பவத்தை நினைத்துப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது.

அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் தமிழகத்தை பொதுமக்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னைத் தானே தமிழகத்தின் அப்பா என தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.

எனவே, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் நேரத்தில், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறப்போகும் வெற்றியின் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களோடு, தீயசக்தி திமுகவின் அத்தியாயமும் முடிந்து போகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு!

நாகர்கோவில் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? பரபரப்பு தகவல்கள்! Sukanya Samriddhi Fraud at Nagercoil PO

நாகர்கோவில் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com