இந்தியாவில் முதன்முறை.. உத்தரப் பிரதேச இளைஞரை கருணைக் கொலை அனுமதி

Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஸ் ராணா என்ற இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Published on: March 11, 2026 at 2:23 pm

Updated on: March 11, 2026 at 3:06 pm

புதுடெல்லி, மார்ச் 11 2026: 2013-ஆம் ஆண்டு ஹரிஷ் ராணா சண்டிகரில் பி.டெக் மாணவராக இருந்தபோது, விடுதியில் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து கடுமையான மூளை காயம் அடைந்தார். அதன் பிறகு ஹரிஷ் 13 ஆண்டுகளாக கோமா போன்ற நிலையில் (Vegetative state) உள்ளார். அன்றாட வாழ்க்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறார். ஹரிஷ் ராணாவின் பெற்றோர் 13 ஆண்டுகளாக அவரை கவனித்து வருகின்றனர்.

இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவர்கள் அவர் முழுமையாக குணமடையும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஹரிஷ் ராணாவுக்கு தற்போது தற்போது 31 வயதாகி உள்ளது. எந்த முன்னேற்றமும் இல்லாமல் உயிர்காக்கும் கருவி (life support) மூலம் மட்டுமே உயிருடன் இருந்ததால், அவரது பெற்றோர் கண்ணியத்துடன் இறக்கும் உரிமை அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க: மகளிர் வங்கிக் கணக்கில் ₹9,000 வரவு.. அசாமில் பாஜக அதிரடி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

நீதிபதிகள் ஜே.பி. பர்டிவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்நிலையில், மருத்துவ குழுவின் பரிசோதனைக்குப் பிறகு ஹரிஷ் ராணாவின் உயிர்காக்கும் கருவிகளை திரும்பப் பெற இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. இது இந்தியாவில் கருணைக் கொலை தொடர்பான முக்கிய தீர்ப்பாக கருதப்படுகிறது.

இந்த தீர்ப்பு “மரியாதையுடன் இறக்கும் உரிமை” குறித்து இந்தியாவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கருணைக் கொலைக்கு தெளிவான சட்டம் உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. தாறுமாறாக உயர போகும் விமான கட்டணம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com