Indigo ceo resigns: இன்டிகோவின் தலைமை செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பர்ஸ் திடீரென தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
Indigo ceo resigns: இன்டிகோவின் தலைமை செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பர்ஸ் திடீரென தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

Published on: March 11, 2026 at 1:06 pm
புதுடெல்லி, மார்ச் 11 2026: இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இன்டிகோ(IndiGo)வின் தலைமை செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பர்ஸ் திடீரென தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா உடனடியாக அமலுக்கு வந்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. எல்பர்ஸ் ராஜினாமா கடிதத்தில் நோட்டீஸ் காலத்தை தள்ளுபடி செய்யக் கோரியுள்ளார்.
இடைக்கால CEO யார்?
CEO பதவியிலிருந்து பீட்டர் எல்பர்ஸ் விலகியதால், தற்போது நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராகுல் படியா தற்காலிக முதன்மை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். புதிய நிரந்தர CEO நியமிக்கப்படும் வரை அவர் பொறுப்பில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எல்பர்ஸ் 2022 முதல் இண்டிகோவில் பணியாற்றி வருகிறார், முன்னதாக நெதர்லாந்து நாட்டின் விமான நிறுவனமான KLM-இல் CEO-ஆக இருந்தவர்.
இதையும் படிங்க: இந்தியாவில் தங்கம், டாலர் கையிருப்பு புதிய உச்சம்.. ரிசர்வ் வங்கி
ராஜினாமா காரணம்
2025 டிசம்பரில் இன்டிகோ நிறுவனத்தில் பெரிய செயல்பாட்டு சிக்கல் ஏற்பட்டது. விமானிகள் பற்றாக்குறை மற்றும் புதிய விதிகள் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் இந்திய விமானத் துறையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் சில மாதங்களுக்குப் பிறகே பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமா செய்துள்ளார். இந்த நெருக்கடிகள் பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கிடுகிடுவென எகிறிய உர விலைகள்.. ஏற்றமும்- காரணமும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com