ஈரானில் அமில மழை எச்சரிக்கை!

Acid rain warning in Iran: ஈரானில் நச்சு அமில மழை பெய்யும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published on: March 9, 2026 at 2:39 pm

தெஹ்ரான் மார்ச் 9 2026: கடந்த 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானில் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்தார். பதிலடியாக ஈரானும் எதிர் தாக்குதல் நடத்தியது. ஈரான் சரணாகதி அடைவதே இதற்கு தீர்வு. தாக்குதல் மேலும் வலுப்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து இருந்தார்.

இதற்கு ஈரான் தொடர்ந்து எங்களால் ஆறு மாதங்கள் வரை கடும் போர் நடத்த முடியும் என்று பதிலளித்தது இந்நிலையில் ஈரானின் 4 கச்சா எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியது.

ஒரு கோடி பேர் வசிக்கும் தலைநகர் தெஹ்ரானில் நடந்த இந்த தாக்குதலால், நச்சு அமில மழை பெய்யும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால், தொண்டை வலி, கண் எரிச்சலால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதையும் படிங்க: ஈரான் புதிய உச்ச தலைவர்.. யார் இந்த மொஜ்தபா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com