இந்தியாவில் தங்கம், டாலர் கையிருப்பு புதிய உச்சம்.. ரிசர்வ் வங்கி

Reserve Bank of India: இந்தியாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 728 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை உயரத்தை எட்டியுள்ளது.

Published on: March 9, 2026 at 2:14 pm

புதுடெல்லி, மார்ச் 9, 2026: இந்தியாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 728 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து புதிய சாதனை உயரத்தை எட்டியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.88 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, 728.49 பில்லியன் டாலரை கடந்த சாதனை உயரத்தை எட்டியுள்ளது.

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வெளிநாட்டு நாணயக் கையிருப்பின் முக்கிய கூறான தங்கக் கையிருப்பின் மதிப்பு 4.14 பில்லியன் டாலர் உயர்ந்து 131.63 பில்லியன் டாலராகியுள்ளது. அதேநேரம், வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் (எஃப்.சி.ஏ), கையிருப்பின் மிகப்பெரிய கூறாக, 561 மில்லியன் டாலர் உயர்ந்து 573.12 பில்லியன் டாலரை கடந்துள்ளது.

இதையும் படிங்க: பெண்கள் அதிகாரமளிப்பு.. 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்கள்.. எஸ்.பி.ஐ அறிமுகம்!

எஃப்.சி.ஏ, டாலர் மதிப்பில் வெளிப்படுத்தப்படும் போது, யூரோ, பவுண்ட், யென் போன்ற அமெரிக்கா அல்லாத நாணயங்களின் மதிப்பு உயர்வு அல்லது சரிவு ஆகியவற்றின் தாக்கத்தையும் உள்ளடக்கியதாகும்.
இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தில் (ஐ.எம்.எஃப்) மத்திய வங்கியின் நிலை 158 மில்லியன் உயர்ந்து 4.87 பில்லியன் டாலராகியுள்ளது. சிறப்பு வரைவுக் உரிமைகளின் (SDR) மதிப்பு 26 மில்லியன் உயர்ந்து 18.86 பில்லியன் டாலராகி உள்ளது.

வெளிநாட்டு நாணயக் கையிருப்பு ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் முக்கியமான குறியீடாகும். மேலும், நாணய மாற்று விகிதத்தை நிலைப்படுத்துவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டாடா கன்ஸ்யூமர் 5 சதவீதம் வரை உயர வாய்ப்பு.. முதலீட்டாளர்கள் நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com